வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் திருகோணமலை நகரம் வழமை போன்று இயங்கி வருகின்றது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதினால் சில கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் சில கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும் தெரியவருகின்றது.
அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட மையினால் ஹர்த்தால் தேவையில்லை எனவும் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment