வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Share This



வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் ”மீண்டும் பாடசாலைக்குச் செல்வோம்... மகிழச்சியான கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவோம்” எனும் விசேட வேலைத்திட்டத்தின் கீழ் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் திருமதி றுாபவதி கேதீஸ்வரன் தலமையில் இன்று இடம்பெற்றது. 


இந்த விசேட வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் பெற்றோரை இழந்த, பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் பெறுமதி கொண்ட கற்றல் உபகரணத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 



இந்த நிகழ்வில் மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ், திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் எம். நெளபர், கிளிநொச்சி மாவட்ட உதவி செயலளார், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு அலுவலர்,மொழிகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர், உளவள துணை அலுவலர் மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 


இந்த தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் வன்னி ஹோப் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னாா், நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாக மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.ரீ. எம். பாரிஸ் இதன் பேது தெரிவித்தாா்.





No comments:

Post a Comment

Pages