(அப்துல்சலாம் யாசீம்)
ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரிசி ஆலை ஒன்றின் கூரைமேல் ஏறி தவறுதலாக விழுந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (19) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்குறனை -07ம் கட்டை பகுதியைச் சேர்ந்த முஹம்மத் யூசுப் முஹம்மத் புஹாரீ (60 வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலுள்ள பொப் மில் என்றழைக்கப்படும் அரிசி ஆலையில் போடப்பட்டிருந்த சீட் உடைந்த நிலையில் கிடந்ததாகவும் அதனை மாற்றுவதற்காக கூரை மேல் ஏறிய நிலையில் தவறுதலாக விழுந்து கழுத்து உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது ஹொரவ்பொத்தான பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மரணம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment