திருகோணமலையில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு (வீடியோ இணைப்பு) - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருகோணமலையில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வு (வீடியோ இணைப்பு)

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)


 கொவிட்19 தொற்றினை தடுப்பதற்கான விழிப்புணர்வூட்டல் திட்டத்தின் ஒரு அங்கமாக திருகோணமலை அனுராதபுர சந்தியில் விழிப்புணர்வூட்டல் பதாகைகளையும் சுவரொட்டிகளையும் துண்டுப் பிரசுரங்களையும் வழங்கும் நிகழ்வொன்று இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் திருகோணமலைக் கிளைத் தொண்டர்களினால் மேற்கொள்ளப்பட்டது. 

திருகோணமலை மாவட்ட கிளை நிறைவேற்று அதிகாரி திரு. வ. தர்மபவன்  ஆரம்பித்து வைத்தார்.


இச் செயற்திட்டம் திருகோணமலை மாவட்டத்தின் சகல பிரிவுகளுக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் அதற்குப் பொதுமக்களும் இந்நோயின் தாக்கங்களை உணர்ந்து தமது ஒத்துழைப்பினையும் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


இச் செயற்பாட்டில் இ. செ. சி. சங்கத் தொண்டர்களுடன் திருமலைக் கிளையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியும் தற்போதைய பதில் செயலாளருமான டொக்டர் என். ரவிச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்.









No comments:

Post a Comment

Pages