போதைப்பொருளுடன் சிக்கிய இராணுவ சிப்பாய்க்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இராணுவ வாகனம் ஒன்றில் 45 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கடத்திச் சென்றபோது ஹொரன பிரதேசத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மட்டும் இராணுவத்தில் இருந்து விலகிச் சென்ற சிப்பாய் ஆகியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இராணுவத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் பயன்படுத்தப்படும் இந்த வாகனம் இயந்திரவியல் காலாட்படை பிரிவுக்கு சொந்தமானது என்பதுடன் நிரந்தர வாகன ஓட்டுனர் விடுமுறையில் சென்றிருந்த மையால் அவருக்கு மாறாக நியமிக்கப்பட்ட சாதியால் இந்த வாகனம் செலுத்தப்பட்டுள்ளது
எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் கிடைத்தவுடன் பாதுகாப்பு பதவி நிலை அணியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேற்படி இராணுவ சிப்பாய் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சட்ட விதிகளின் படி அவருக்கு எடுக்கக்கூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இராணுவ பொலிஸ் பிரிவின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment