(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கிண்ணியா தள வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்க உடனடி நடவடிக்கை எடுங்கள் அல்லது
மத்திய அரசுக்கு விடிவிக்க நடவடிக்கை எடுங்கள் என கிண்ணியா சிவில் சமூகப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கை கடிதத்தினை இன்று (16) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து ஆளுநரிடம் கையளித்தனர்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சுமார் ஒரு இலட்சம் பேர் வரை சேவை பெறும் கிண்ணியா தள வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் பெளதீக வளப்பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமைகளை கிண்ணியா உலமா சபை,சூறா சபை,பள்ளிவாசல்கள் சம்மேளனம்,வைத்தியசாலை அபிவிருத்திக்குழு பிரதிநிதிகள் ஆகியோர் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களை சந்தித்து
தெளிவு படுத்தினர்.
இதன் போது கிண்ணியா வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள விசேட நிபுணர் வைத்தியர் பிரச்சினை,
காணி கட்டிட பிரச்சினை,பிரசவ காலத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினை என பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இவற்றை தீர்க்க முடியாதவிடத்து
வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் விடுவிக்க நடவடிக்கை
எடுக்குமாறும் சிவில் சமூகத்தினர் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
No comments:
Post a Comment