மொரவெவ பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

மொரவெவ பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்!

Share This


திருகோணமலை-மொரவெவ பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவரை இடைநிறுத்தி உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.


கட்சியின் யாப்பை மீறி செயற்பட்டமை, கட்சியின் ஒழுங்கு விதிகளையும் நெறிமுறைகளையும் மீறியமை  ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு  ஐக்கிய தேசிய கட்சி மொரவெவ பிரதேச சபையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் யாக்கூப் தம்பி ஜெனீர்தீன் மற்றும் ஆர்.எம்.எஸ்.விஜயசிங்க எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இவர்களுடைய உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாகவும் இக் கடிதத்தின் பிரதிகள் தேர்தல் ஆணைக்குழு- மொரவெவ பிரதேச சபையின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages