(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கிண்ணியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுடன் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் மகமார் கிரமத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுடன் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதனை அடுத்து இவ்வாறு அடக்கம் செய்வதற்கான இடங்கள் நாடளாவிய ரீதியில் முன்மொழியப்பட்டு வரும் நிலையில் கிண்ணியாவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மகமார் கிராம சேவகர் பிரிவின் மையவாடி ஒன்று அடக்கம் செய்வதற்கான இடமாக முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த இடத்தினை இன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அது தொடர்பிலான அறிக்கையினை வழங்கவுள்ளதாகவும் சுற்றறிக்கைக்கு அமைவாக குறித்த இடம் அமையும் போது அடக்கம் செய்வதற்கான இடமாக இது அடையாளப்படுத்தப்படவுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கணி குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment