திருகோணமலையில் இளைஞரொருவர் மரணம் விசாரணைகள் தீவிரம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருகோணமலையில் இளைஞரொருவர் மரணம் விசாரணைகள் தீவிரம்!

Share This



(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா  கிளிகுஞ்சுமலைப் பகுதியில் இளைஞரொருவர் கீழே விழுந்து மரணித்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கன்னியா கிளிக்குஞ்சுமலை பகுதியில் உள்ள   கட்டிட பொருட்கள் விநியோகிக்கும் இடத்தில் மூவர் வேலை செய்து கொண்டிருந்த போது சக நண்பர் தள்ளியதில் விழுந்து  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (30) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-கன்னியா புதுக்குடியிருப்பு -வரோதய நகர் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் அருண்குமார் (21 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது மூவர் கட்டிட பொருட்கள் விநியோகிக்கும் இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த வேளை இருவருக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் மற்ற நபரை தள்ளிவிட்டு விழுந்துள்ளதாகவும் இதனையடுத்து அவர் மயங்கி கிடந்த நிலையில் 1990 அவசர ஆம்புலன்ஸ் மூலமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,சந்தேகத்தின் பேரில் அவருடன் வேலை செய்து கொண்டிருந்த 17 வயது இளைஞரை போலீசார் அழைத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Pages