திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி பம்மதவாச்சி பகுதியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் கணவர் மற்றும் அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து இன்று (27) பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியாவில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி சாரதிக்கு தூக்கம் ஏற்பட்டமையால் வீதியை விட்டு முச்சக்கர வண்டி விலகியதால் விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்பகட்ட விசாரணையன் மூலம் தெரியவந்துள்ளது
.
இவ்விபத்தில் மன்னார்- எருக்கலம்பிட்டி- புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த எம்.ஐ.எம்.பர்ஜுன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர் 19 90 அவசர ஆம்புலன்ஸ் வண்டி மூலமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment