(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச் சடலம் இன்று (24) மாலை மீற்கப்பட்டுள்ளது.
இச் சடலம் யாருடையது என்பது பற்றிய தகவல் தெரியாது எனவும் நீல சாரம் மற்றும் வெள்ளை கோடு சேட் அணிந்து இருப்பதாகவும் தெரிய வருகின்றது.
குச்சவெளி மதுரங்குடா பகுதியில் ஆணொருவர் விழுந்து கிடப்பதாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் குறித்த சடலத்தை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அடுத்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்து சடலத்தில் இரண்டு கைகளிலும் காயங்கள் இருப்பதுடன் ,முகத்தில் சில இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் குறித்த சடலத்தை பார்வையிட்ட திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர பொறுப்பதிகாரி குறித்த சடலத்தை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதேவேளை குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment