கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீத் உத்தியோகபூர்வமாக இன்று (09) தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருகோணமலை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சம்மாந்துறையை பிறப்பிடமாக கொண்ட இவர் வெலிசற சுவாச நோய்களுக்கான தேசிய வைத்தியசாலையின் அத்தியட்சகராகவும், நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் ராகம போதன வைத்தியசாலை ஆகியவற்றில் வைத்திய அத்தியட்சகராகவும், சுகாதார அமைச்சின் கீழுள்ள அனைத்து வைத்தியசாலைகளின் ஆய்வுகூடங்களுக்கான அத்தியட்சகராகவும் கடமையாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந், சமூக வைத்திய நிபுணர் டொக்டர் அருள்குமரன் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment