முதலில் கௌரவ பிரதமர் மற்றும் அவரது பாரியார் உள்ளிட்டோர் அலரி மாளிகை வளாகத்தில் உள்ள புத்த பெருமானின் உருவ சிலைக்கு மலர் வைத்து மத வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, தர்மபோதனைகளுக்காக வருகை தந்த அமரபுர ஸ்ரீ சுமன விகாரை தரப்பின் பன்னிபிடி தெவ்ரம் வேஹர ஸ்தாபகர் பேராசிரியர் வணக்கத்திற்குரிய கொலன்னாவே ஸ்ரீ சுமங்கல மஹாநாயக்கரை மத கலாசார மரியாதைகளுடன் வரவேற்றார்.
ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் இந்த அமாதம் சிசிலச தர்ம போதனை நிகழ்வு இடம் பெறுகின்றன. அந்நிகழ்வின் 210 ஆவது உபதேசமானது வெசாக் பௌர்ணமி தினத்தன்று இடம் பெற்றது. வாழ்வியல் தத்துவங்களை விளக்கும் வகையில் தர்ம போதனை இடம்பெற்றது.
வெசாக் பௌர்ணமி தினத்தில் 2565 வருட கால பின்னணியை கொண்ட பௌத்த மத கோட்பாட்டையும், புத்த பெருமானின் மத போதனைகளையும் உலக வாழ் பௌத்தர்கள் அனைவரும் மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என இதன்போது தெரிவக்கப்பட்டது.
அமரபுர ஸ்ரீ சுமன விகாரை தரப்பின் மகாநாயக்கர் பன்னிபிடிய ஸ்ரீ தெவ்ரம் வெஹர ஸ்தாபகர் போராசிரியர் கொலன்னாவே ஸ்ரீ சுமங்கல தேரர் பின்வருமாறு உபதேசம் செய்தார்.
மரியாதைக்குரிய கௌரவ பிரதமர் அவர்களே, 30 வருட கால யுத்த சூழலும், அதன் விளைவுகளும் உங்களுக்கு நினைவில் இருக்கும். யுத்த கொடுமைகளை குளிர் அறையில் இருந்து நீங்கள் காணவில்லை, காணொளிகள் ஊடாகவும் பார்வையிடவில்லை. மக்களின் உயிர் பறிபோயுள்ளது என்பதை அறிந்தவுடன், அவ்விடம் விரைந்து சென்றீர்கள். கொழும்பு புறக்கோட்டையில் குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது மனித உடல்கள் சிதறிக்கிடந்தன அவ்வேளை நீங்கள் அங்கு சென்றீர்கள்.
கெபிடிகொல்லாவ பிரதேசத்தில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களின் உடல்களின் மீது அவர்களின் உறவுகள் வீழ்ந்து அழுதனர். அப்போதும் நீங்கள் அவ்விடம் சென்றீர்கள். அன்று நீங்கள் எதை கண்டீர்கள். நாற்திசையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள யுத்தத்தை எவ்வாறு நிறைவுக்கு கொண்டு வருவது என்பதை பற்றி யோசித்தீர்கள்.
இதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கடவுளே கர்ப்பணி தாய்மார்களை கூட வெட்டிக் கொன்றதை பார்க்கும் போது, குழந்தை தனமான சிறு பிக்குகளையும் துண்டுத் துண்டுகளாக வெட்டிக் கொலை செய்தமையினை நீங்கள் மனதளவில் உணர்ந்தீர்கள். அந்த வேதனை இன்றும் உங்களின் நினைவில் இருக்கும்.
அந்த வேதனை , உணர்வுகளை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டீர்கள். இப்பிரச்சினையை விரைவாக தீர்க்க வேண்டும் என்றீர்கள். நான் இறப்பதற்கு முன்னர் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என மனதளவில் உறுதி கொண்டீர்கள். யுத்தத்துடன் வாழ்ந்த இராணுவத்தினருக்கு நீங்கள் மீண்டும் உயிர் வாழும் வாய்ப்பு கொடுத்தீர்கள். அனைவருக்கும் தைரியமளித்தீர்கள் என்று ஸ்ரீ சுமங்கல தேரர் குறிப்பிட்டார்.
நாட்டின் நன்மைக்காக பிறக்கும் தலைவர்கள் உலகில் மிக குறைவு வாழ்நாள் முழுவதும் புண்ணியம் பெறும் மனிதர்கள் பிறப்பதும் அரிது,ஆனால் மறைமுகமான பெரும் புண்ணியம் உங்கள் வசம் உள்ளது எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
வைராக்கியம், பொறாமை, குரோதம் ஆகியவற்றை நீக்கி வாழ்வது அவசியம் என சுட்டிக்காட்டிய தேரர், தற்போதைய கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் தனது பிள்ளைக்கு மலரஞ்சழி செலுத்த கூட முடியாத நிலைமை காணப்படுகிறது. உலக மாயையின் காரணமாகவே இந்நிலைமை தோற்றம் பெற்றுள்ளது எனவும் தேரர் போதனை வழங்கினார்.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இடம்பெற்ற அமாதம் சிசிலச' 210 தர்ம பதேச நிகழ்வில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால், பிரதமரின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment