திருகோணமலை -மூதூரில் 16 வயது இளைஞரொருவர் ஆற்றில் மூழ்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர்- 2 ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த க.பொ.த சாதாரன தர மாணவன் நஜீப் அதீப் (16வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் அவரது நண்பர்களுடன் ஆலிம்சேனை எனப்படும் இடத்திலுள்ள ஆறு ஒன்றில் இன்று (03) 1 மணியளவில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அதனையடுத்து பொதுமக்களின் உதவியுடன் அவர் காப்பாற்றப்பட்டு மூதூர் வைத்தியசாலைக்கு 3 மணியளவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக மரண விசாரனை அதிகாரி எம்.வை.எம்.லாபிர் குறிப்பிட்டார்.
குறித்த மாணவனின் உடலை மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த இடத்தில் குளிப்பதனை தடை விதிக்க வேண்டும் எனவும் பிரதேச சபைத் தவிசாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment