கிண்ணியா-நடுத்தீவு பிரதேசத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு- பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கிண்ணியா-நடுத்தீவு பிரதேசத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு- பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

Share This

 


திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நடுத்தீவு  பிரதேசத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் இன்று (31) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர். எம்.தௌபீக்கினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.


கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர் கே.எம்.நிஹார்  தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா பிரதேசத்தில் கொரோணா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்ததன் காரணமாக இந்தப் பிரதேசத்தில் ஒரு தனிமைப்படுத்தல் முகாம் மேலும் சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்கின்ற மக்களின் கோரிக்கைக்கு அமைவாகவும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களின் அயராத முயற்சியினால் கிண்ணியா நடுத்தீவு பிரதேசத்தில் இன்றைய தினம் தனிமைப்படுத்தப்படும் முகாம் மற்றும் சிகிச்சை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கான வைத்திய வசதிகள் இல்லாமை ஒரு பெரிய குறைபாடாக இருந்தது. இருந்த போதிலும் இந்த மையத்தில் கர்ப்பிணித் தாய்மார்களும் சிகிச்சை பெறக்கூடிய ஏற்பாடு உள்ளது எனவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.


இதேவேளை   நடுத்தீவு  பிரதேசத்தில் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் அமைந்துள்ள குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரிக்கு இன்றைய நிகழ்விற்கு  அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அப் பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி தமது அதிருப்தியை தனது முகநூல் ஊடாக வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்பிரதேசத்திற்கு பொறுப்பான பொறுப்பதிகாரி அழைக்கப்படாமல் கொரோனா தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டமை தொடர்பில் கிண்ணியா புத்திஜீவிகள் தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனாலும் குறித்த நிகழ்விற்கு பொறுப்பு வாய்ந்த சுகாதார வைத்திய அதிகாரிஅழைக்கப்படாத நிலையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஷார், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம்.கொஸ்தா ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment

Pages