(அப்துல் சலாம் யாசீம்)
ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களைக் கனடா - திருகோணமலை நலன்புரிச் சங்கக் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவருமான திரு க.ச,குகதாசன் அவர்கள் இன்று திருகோணமலைக் கச்சேரியில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் திரு அருள்ராஜ் ,பேரிடர் முகாமைத்துவ ஆணையாளர் திரு சுகுணதாஸ் ஆகியோரிடம் கையளித்தார்
பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் முடக்கப் பட்டுள்ள 9 கிராம சேவையாளர் பிரிவுகளில் பூம்புகார் கிழக்கு, பூம்புகார், பாலையூற்று, லிங்கநகர்,காந்திநகர் முதலிய பகுதிகளைச் சேர்ந்த, நாளாந்தச் சம்பளத்துக்கு வேலை செய்யும் மக்கள் உணவுக்கு மிகவும் சிக்கல்படும் நிலை தோன்றி உள்ளது
இந்த நிலையில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கனடா - திருகோணமலை நலன்புரிச் சங்கமானது , அதிகம் பாதிக்கப்பட்ட பூம்புகார் கிழக்கு, பூம்புகார், பாலையூற்று, லிங்கநகர், காந்திநகர் முதலிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கும் பொருட்டாக ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்கியது
மேற்படி உணவுப் பொருட்களைக் கனடா - திருகோணமலை நலன்புரிச் சங்கக் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவருமான திரு க.ச,குகதாசன் அவர்கள் இன்று திருகோணமலைக் கச்சேரியில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் திரு அருள்ராஜ் ,பேரிடர் முகாமைத்துவ ஆணையாளர் திரு சுகுணதாஸ் ஆகியோரிடம் கையளித்தார்.
மேற்படி உலர் உணவுப் பொருட்கள் உடனடியாக முற்குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment