திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
இரு பவுசர்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் இருவர் திருகோணமலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (07)
2 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 87 ஆம் கட்டை சந்திப் பகுதியில் இடம்பெற்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது-
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு எரிபொருட்களை ஏற்றிச் சென்ற பவுசர் வாகனமொன்றும், குருணாகலையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற பவுசர் வாகனமுமே இவ்வாறு மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் 35 மற்றும் 46 வயது சாரதியொருவரும் உதவியாளர் ஒருவருமே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
No comments:
Post a Comment