கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து!

Share This

 


(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்குமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் கிழக்கு மாகாண இணையத்தளமான EP.gov.lk எனும் மாகாண சுகாதார சேவைகள் வலைப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளதுடன் மேன்முறையீட்டு இற்கான விண்ணப்ப படிவமும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோவிட்-19  சூழ்நிலை காரணமாக 2020 எட்டாம் மாதம் 29ஆம் திகதி வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்த முடியாது போயிருந்த நிலையில் இம்முறை 2021 ஆம் ஆண்டு வருடாந்த இடமாற்ற சபையின் முடிவுகள் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும்தற்காலிகமாக இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages