(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி சீனக்குடா பகுதியில் அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் லொறி நேருக்கு நேர் மோதியதில் இரண்டு வாகனங்களில் சாதிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இவ்விபத்து இன்று (27) 5.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையில் இருந்து கிண்ணியா நோக்கி சென்ற 1990 அம்பியூலன்ஸ் வண்டியும், கிண்ணியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்த லொறி ஒன்றும் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் 1990 அம்பியூலன்ஸ் சாரதிக்கும், லொறியின் சாரதி காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்து தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment