(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை-கன்னியா- கிளிக்குஞ்சு மலைப்பகுதியில் வறிய நபரொருவரின் வீடு தீப்பற்றியுள்ளதாக தெரிய வருகின்றதுடன் குறித்த சம்பவம் நேற்றிரவு (13) இடம்பெற்றுள்ளது.
வீட்டு உரிமையாளரான முத்துராமன் சிறுமணி என்ற 48 வயதுடைய பெண்ணின் வீட்டில் அவருடைய உறவினர்களின் தம்பதியினர் வாழ்ந்து வந்ததாகவும் நேற்றிரவு பக்கத்து வீட்டுக்கு சென்ற போது தீ பற்றியதாகவும் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீடு தீப்பிடித்து எரிவதாக அயலவர்கள் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு சென்றபோது வீடு முற்றாக கைப்பற்றியதாகவும் அதனை அடுத்து தீயணைப்பு படையினருக்கு தெரியப்படுத்தி தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாகவும் வீட்டில் அனைத்து பொருட்களும் முற்றாக தீ பற்றியதாகவும் தெரியவருகின்றது.
ஆனாலும் தீ பற்றிய மைக்கான காரணங்கள் எதுவும் தெரியாத பட்சத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இருந்த போதிலும் குறித்த வீட்டில் வாழ்ந்து வந்த தம்பதிகளின் அடையாள அட்டை, உடைகள் மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வீட்டில் காணப்பட்ட அனைத்து பொருட்களும் தீப்பற்றி உள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு மஹதிவுல்வெவ-தெவனிபியவர விஜயராஜ விகாரையின் விகாராதிபதி பொல்ஹேன்கொட உபரத்ன ஹிமிசென்று பார்வையிட்டதுடன் குடும்பத்திற்கு தேவையானஉலர் உணவுப் பொருட்கள் வழங்கியதுடன் வீட்டை நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை பெற்று தருவதாக கூறியதாகவும் பாதிக்கப்பட்ட தம்பதியினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment