திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரம் வழங்கிவைப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிசிஆர் இயந்திரம் வழங்கிவைப்பு

Share This


(அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பீசீஆர் இயந்திரம் அலரி மாளிகையில் வைத்து  பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர்  ஜகத்திடம் இன்று (16) கையளிக்கப்பட்டது.


People’s Leasing கம்பெனியின் நிதி உதவியுடன் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் அயராத முயற்சியினால் இந்த பீசிஆர் இயந்திரம் பெறப்பட்டுள்ளது


கடந்த மே மாதம் 23ம் திகதி  People’s Leasing கம்பெனிக்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவினால் திருகோணமலை பொது வைத்தியசாலை பணிப்பாளர் Dr. ஜகத்திடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ச திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் People’s Leasing கம்பெனியின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


இதேவேளை பீசீஆர்  இயந்திரத்தை



பெற்றுக்கொள்வதற்கு பாடுபட்ட கிண்ணியா தள வைத்தியசாலை அபிவிருத்தி குழு மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages