ரொட்டவெவயில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து- பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

ரொட்டவெவயில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்து- பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்!

Share This


(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி மிரிஸ்வெவ  பகுதியில் பான் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள்மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.


இவ்விபத்து இன்று (21)காலை 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் ஆர்.ஆர்.டி. சுதர்சன ரத்னாயக்க (26 வயது) எனவும் தெரியவருகின்றது.



திருகோணமலையில் இருந்து ஹொரவ்பொத்தானை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஹொரவ்பொத்தானை பகுதியில் இருந்து வந்த பாண் விற்பனை செய்யும் லொறி மிரிஸ்வெவ உள் வீதிக்கு திரும்பியபோது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் தெரியவருகின்றது.


குறித்த விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


விபத்துடன் தொடர்புடைய சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவித்தனர்.






No comments:

Post a Comment

Pages