திருகோணமலை பொது வைத்தியசாலை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலாளிக்கு படைவீரரொருவர் தாக்குதல் நடாத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த சம்பவம் இன்று (08) பிற்பகல் 3.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
நோயாளிகளை பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்கு வருகைதந்த படை வீரர் ஒருவரின் சகோதரிக்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் தேவையற்ற விதத்தில் பேசியுள்ளார்.
இதனையடுத்து கோபம்கொண்ட படைவீரர் குறித்த பாதுகாப்பு உத்தியோகத்தரை அழைத்து கன்னத்தில்
அறைந்ததாகும் தெரியவந்துள்ளது.
இதேவேளை கடந்த 6ஆம் திகதி கந்தளாய் பிரதேசத்தில் இருந்து நோயாளி ஒருவரை பார்வையிட வந்த பெயர் குறிப்பிட விரும்பாத 34 வயதுடைய பெண்ணொருவருக்கு அவருடைய நோயாளியை பார்வையிட அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்குவதாக அன்றையதினம் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் பிரதானியொருவர் பாலியல் இலஞ்சம் கோரியதாகவும் பாதிக்கப்பட்ட பெயர் குறிப்பிட விரும்பாத கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த பாதுகாப்பு கடமையில் இருந்த பிரதானி ஏற்கனவே சிவில் பாதுகாப்பு படை உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த நிலையில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலை பாதுகாப்பு காவலாளியாக கடமையாற்றி வரும் சில உத்தியோகத்தர்கள் நோயாளர்களையும் அவர்களது உறவினர்களையும் தேவையற்ற வசனங்களை பாவித்து பேசுவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் வைத்தியசாலைக்கு வருபவர்களை மதிக்காமல் தேவையற்ற விதத்தில் செயற்பட்டு வருவதில்லையே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், ஒழுக்கம் இல்லாமல் செயற்படும் உத்தியோகத்தர்களை உடனடியாக இடை நிறுத்த வேண்டும் எனவும் புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment