(அப்துல்சலாம் யாசீம்)
கொழும்பில் இடம்பெற்று வரும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட நான்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனத்தை தெரிவிப்பதாக திருகோணமலை ஊடகவியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் வீட்டின் அருகில் ஊடகவியலாளர்கள் நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கே திருகோணமலை ஊடகவியலாளர் சங்கம் இவ்வாறு தமது கண்டனத்தை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்தில் ஏனைய பல ஊடகவியலாளர்கள் இருந்த போதும் மேற்படி நியூஸ்ஃபெஸ்ட் செய்தி பிரிவின் ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும் தாக்குதலை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர் அதிகாரிகள் உடன் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன் போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment