(அப்துல்சலாம் யாசீம்)
ஊடகவியலாளர்களுக்கான அனர்த்த அபாய முகாமைத்துவ பொறிமுறை தொடர்பான ஆளுமை விருத்தி செயலமர்வு இன்று (09) திருகோணமலயில் இடம்பெற்றது.
அனர்த்தத்தின் போது ஊடகவியலாளர் பொதுமக்களை தங்களது உயிர் உடமைகளை பாதுகாக்கும் நோக்கில் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இதன்போது தெளிவூட்டப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவ பொறிமுறை. வளிமண்டலவியல் திணைக்களத்தின் செயற்பாடுகளும் கடமைகளும், நீர் பாசன திணைக்களத்தின் பொறிமுறை மற்றும் வெள்ள அனர்த்தத்தின் போது நீர்ப்பாசன திணைக்களத்தின் கடமைகள், பொறுப்புக்கள் அனர்த்த அபாயத்தை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்ற விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.என்.ஜயவிக்ரம அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பயிற்சி, விழிப்புணர்வூட்டல் பிரிவின் பணிப்பாளர் சுகத் திஸ்ஸாநாயக, திருகோணமலை மாவட்ட உதவி பணிப்பாளர் கே.சுகுணதாஸ். வேல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் ஏ.ரவீந்திரன் வளிமண்டலவியல் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் டுலாரி பெர்ணான்டோ என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment