பஸ்ஸுடன் முற்சக்கர வண்டி மோதி விபத்து-பதிவாளர் உட்பட நான்கு பேர் காயம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

பஸ்ஸுடன் முற்சக்கர வண்டி மோதி விபத்து-பதிவாளர் உட்பட நான்கு பேர் காயம்!

Share This

 நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனடியாக வீடியோ வடிவில்  தெரிந்து கொள்ள Trincolive யூடியுப் பக்கத்திற்கு செல்லவும். பெல் பட்டனை அழுத்தவும்.மற்றவர்களுக்கும் செயார் செய்யவும்.


          (அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி கிதுல்வுதுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.


காயமடைந்த நான்கு பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து இன்று (28)  காலை இடம் பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து அரச ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் பின்புறமாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மோதியதாகவும் இதனாலையே விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தின் போது கிண்ணியா ஜாவா வீதியை சேர்ந்த முன்னாள் பதிவாளர் எம்.எஸ்.எம்.நியாஸ் (61வயது) மற்றும் அரச  சார்பற்ற நிறுவனம் ஒன்றின் அதிகாரி (60வயது) அவரது  ஊழியரும் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இதேவேளை விபத்துக்குள்ளான போது முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்திருந்த நிலையில் அவரை வைத்தியசாலைக்கு செல்ல விடாது அப்பகுதியில் உள்ள சிலர்  பொலிஸார் சம்பவ இடத்துக்கு வரும் வரை தடுத்து வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment

Pages