( அப்துல்சலாம் யாசீம்)
கிழக்கு மாகாண சபை வருமான சட்ட மூலம் இல்லாமல் சபைகளுக்கிடையே ஒருமைப்பாடு இல்லாமல் வருமான நிதி சேகரிக்கப்பட்டு வருவதாக சமூக அபிவிருத்தி கட்சி குற்றஞ்சாற்றியுள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் குகதாஸ் பிரகாஷ் கிழக்கு மாகாண பிரதம செயலாளருக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.
கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகள் வருமானம் சேகரிக்கும் பொருட்டு பணத்தை பெறுகின்றார்களே தவிர உபசட்டமூலம் இல்லாமல் சேகரிக்கும் வருமானங்களுக்கு சேவை கிடைக்கப் பெறவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் நடைபாதை வியாபாரி, சுற்றுலா விடுதி, ஹோட்டல், உணவு விடுதி, கல்யாண மண்டபங்கள், பல்வேறுபட்ட வர்த்தக கடைகள், அறுவைச் சாலை கட்டணம், வீதி அலங்காரம் செய்தல், வெதுப்பக கட்டணம் போன்ற விடயங்களுக்காக நகர சபை, மாநகர சபைகள் வருமானம் சேகரிப்பு நடைபெற்று வருகிறது.
.ஆனாலும் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதில்லை பணம் அறவிடுவதை தவிர சுகாதார ஏற்ற அமைவிடம் சுற்றாடல் பாதிப்பு ஆகியவற்றை கரைத்துக் கொள்ளப்படுவதில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண சபை 1988 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை 2007 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு இன்று வரை உள்ளூராட்சி சபைகளில் உப சட்டமூலம் வெளியிடப்படவில்லை எனவும் வடக்கு மாகாண சபை 2017 ஆம் ஆண்டு உப சட்டமூலம் வெளியிட்டுள்ளது எனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே கிழக்கு மாகாண சபை உப சட்டமூலத்தை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும் அவர் பிரதம செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment