(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிண்ணியா வெருகல் ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 26 விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு உபகரணங்கள் (AHRC) அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
தற்கால பொருளாதார பின்னடைவு நிமித்தம் நாளாந்த வருமானத்தை இழந்து நிற்கும் விவசாய குடும்பங்களின் நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் வகையில் AHRC நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலைபேறான உணவு தேவையை பூர்த்தி செய்யும் செயற்திட்டத்தின் கீழ் இப்பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் கிண்ணியா பிரதேச செயலாளர் மூதூர் பிரதேச செயலாளர் வெருகல் பிரதேச செயலாளர் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் AHRC நிறுவனத்தின் இணைப்பாளர் பிரதி இணைப்பாளர் உதவி கணக்காளர் திட்ட இணைப்பாளர்கள் மற்றும் வெருகல் பிரதேச சிவில் செயற்பாட்டு வலையமைப்பின் செயலாளர் மற்றும் அங்கத்தவர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
No comments:
Post a Comment