புனித நோன்பை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

புனித நோன்பை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு

Share This

 


          (அப்துல்சலாம் யாசீம்)


திருகோணமலை-ரொட்டவெவ கிராமத்தில் அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் பேரவையின் ஊடாக திருகோணமலை மாவட்டத்தில் இயங்கி வரும் YMMA கிளையினால் புனித நோன்பை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் இன்று (02)  வழங்கி வைக்கப்பட்டது.

சமூக வலைத்தளம் ஊடாக மொரவெவ சிவில் சமூக அமைப்பினால்  நோன்பு காலத்தில் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பதிவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு திருகோணமலை YMMA மாவட்ட கிளையின் மாவட்ட பணிப்பாளர் எம்.எம்.முக்தார் , கிளைத் தலைவர் ஏ.எம்.எம்.பரீட்  சக  திருகோணமலை ஜமாலியா YMMA உறுப்பினர்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட  70 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.


இதன்போது சிவில் சமூக அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பைசர், மௌலவி ஐனுதீன், மற்றும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் அப்துல்சலாம் யாசீம் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைத்தனர்.

















No comments:

Post a Comment

Pages