சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றிகள் - எம் எஸ் தௌபீக் எம்.பி - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சவூதி அரேபிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றிகள் - எம் எஸ் தௌபீக் எம்.பி

Share This

(அப்துல்சலாம் யாசீம்)

சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் 62 வெளிநாடுகளைச் சேர்ந்த 2148 பேரை மீட்டெடுக்க சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு நன்றிகள் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் அவர்கள் அவரது விஷேட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவரது அறிக்கையில், சூடானின் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் 62 வெளிநாடுகளைச் சேர்ந்த 2148 பேரை மீட்டெடுக்க சவுதி அரேபிய அரசாங்கம் இராப்பகலாக காத்திரமான பல அற்பணிப்புகளை செய்து மீட்டெடுத்துள்ளது.

விஷேட விமானங்கள், விஷேட விமானப்படை விமானங்கள், கப்பல்கள் மூலம் போரில் நிர்க்கதியான வெளிநாட்டவர்களை பாதுகாப்பான முறையில் சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்து உணவு மற்றும் மருந்து தங்குமிட வசதிகள் அனைத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்தது அவரவர் நாட்டு தூதரகங்களுடனும் அவரவர் நாட்டு வெளிநாட்டு அமைச்சர்களுடனும் கலந்தாலோசித்து அவர்களது நாடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்க சகல விதமான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கறது.

உண்மையில் சவுதி அரேபியாவின் இந்த மனிதாபிமான செயல் மிகவும் வரவேற்கத்தக்க சகலராலும் பாராட்டப்படுகின்ற விடயமாகும். சூடானில் நிர்க்கதியான இலங்கையர்களையும் சவுதி அரேபியா பாதுகாப்பான முறையில் சவுதி அரேபியாவுக்கு அழைத்து வந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது மட்டுமல்ல, சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க சகல விதமான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுத்த சவூதி அரசாங்கத்திற்கு மிக்க நன்றிகள்.

எனவும் அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Pages