திருகோணமலை கோமரங்கடவல பிரதான வீதியை மறைத்து சவப்பெட்டியை வீதியில் வைத்து வீதியை மறைத்து அப்பகுதியிலுள்ள மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் கோமரங்கடவல பிரதேசத்தில் மாத்திரம் ஐந்து பேர் இதுவரை யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளதாகவும், இதேவேளை (29) கோமரங்கடவல- அடம்பன பகுதியைச் சேர்ந்த உக்குராலகே ஜயரத்ன (64வயது) யானையின் தாக்குதலினால் உயிரிழந்ததாகவும் அவருடைய சடலத்தை வீதியில் வைத்தே அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யானை தாக்குதலை கட்டுப்படுத்துமாறு பல கோரிக்கைகள் முன்னெடுத்து இருந்த போதிலும் அரசாங்கத்தினால் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
No comments:
Post a Comment