இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையினரின் இரத்ததான முகாம்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையினரின் இரத்ததான முகாம்!

Share This


இலங்கை செஞ்சிலுவைச் சங்க திருகோணமலை கிளையின் இரத்த தான முகாம் திருகோணமலை உட் துறைமுக வீதியில் அமைந்திருக்கும் சங்க மண்டபத்தில் இன்று (28) நடைபெற்றது.


 
இவ் இரத்த தான முகாமில் இளைஞர்கள், யுவதிகள், வர்த்தக நிறுவன ஊழியர்கள், அரச ஊழியர்கள், செஞ்சிலுவை சங்கத் தொண்டர்கள் பலரும் இரத்ததானம் செய்தனர்.

 திருகோணமலை மனோதீபன் பவுண்டேசன் அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் திருகோணமலைக் கிளையின் கௌரவ தலைவர் திரு. வி. முரளீதரன், முன்னாள் தலைவர் டாக்டர் ஈ. ஜீ. ஞானகுணாளன், கௌரவ பிரதிச் செயலாளர் டாக்டர் என். ரவிச்சந்திரன், கிளை நிறைவேற்று அதிகாரி திரு வி. தர்மபவன், இளைஞர் பிரிவு தலைவர் திரு. உ. செந்தூரன், தொண்டர் இணைப்பாளர் திரு சஜீவன், RFL இணைப்பாளர் திரு. கோ. அன்பழகன் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





No comments:

Post a Comment

Pages