எதிர்வரும் 28, 29 திகதிகளில் கடமைக்கு வரமாட்டோம்-சிற்றூழியர்கள் பகிரங்க கடிதம் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

எதிர்வரும் 28, 29 திகதிகளில் கடமைக்கு வரமாட்டோம்-சிற்றூழியர்கள் பகிரங்க கடிதம்

Share This

 


எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதியன்று கடமைக்காக சமூகம் தர மாட்டோம் என சிற்றூழியர் மேற்பார்வையாளர்கள் ஊடாக  வைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


அரசாங்க பொது விடுமுறை நாட்களில் கொடுப்பனவு வழங்குமாறு சிற்றூழியர்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இன்னும் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனடிப்படையில் சிற்றூழியர் மேற்பார்வையாளர் ஊடாக மூதூர், தள  வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு எதிர்வரும் 28-ம் 29 ஆகிய இரு நாட்களும் அரச விடுமுறை தினமாகும். அத்தினத்தில் இரவு பகல் கடமைக்கு சமூகம் தர மாட்டோம் என்பதை மனவேதனையுடன் அறியத் தருவதோடு இந்நாட்களில் வைத்தியசாலையினுடைய சேவைகளுக்கு ஏற்படும் அசௌகங்கரியங்களுக்கு நாங்கள்  பொறுப்புதாரிகளல்ல என்பதை  அறியத் தருகின்றோம் எனவும் மூதூர் தள  வைத்தியசாலை சிற்றூழியர்கள் வழங்கி உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைகளில்  அரச  விடுமுறை தினங்களில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படாமையினால் தாங்களும் அன்றைய தினம் கடமைகளுக்கு செல்வதில்லை எனவும் மாவட்ட சிற்றூழியர்கள் சங்கத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Pages