மதுபான சாலை திறக்க அனுமதிக்க வேண்டாம்.தோப்பூரில் கவனயீர்ப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

மதுபான சாலை திறக்க அனுமதிக்க வேண்டாம்.தோப்பூரில் கவனயீர்ப்பு

Share This

 


திருகோணமலை- தோப்பூர் -கூர்கண்டம் பகுதியில் தனியார் ஒருவரினால் மதுபானசாலை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில் மதுபான சாலைக்கான அனுமதியை வழங்க வேண்டாமென தெரிவித்து (08)  வெள்ளிக்கிழமை  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.


தோப்பூர் -கூர்கண்டம் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற தொழுகையை தொடர்ந்து சுலோகங்களை ஏந்தியவாறு நடைபவணியாக வந்து திருகோணமலை -மட்டக்களப்பு வீதியில் இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


தோப்பூர்-கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை அமையப் பெறுமாக இருந்தால் பல்வேறு சமூக சீர்கேடுகளும், பிரச்சினைகளும் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும், 
அதனால் இப்பிரதேசத்தில் மதுபானசாலை அமைப்பதற்கு தாம் எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.



இது விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு தோப்பூர் - கூர்கண்டம் பகுதியில் மதுபானசாலை திறப்பதனை தடுப்பதற்கு முன்வர வேண்டுமெனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

Pages