திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் சுமார் 9 வருடங்களுக்கு மேலாக தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பணியை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துத்தருமாறு கோரி ஞாயிற்றுக்கிழமை (4) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவர்களை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள்.
இதன்போது இவ்விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதுடன் அவர்களின் கோரிக்கையை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வாக்குறுதியளித்தார்.
No comments:
Post a Comment