சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம்-இரா.சம்பந்தன் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம்-இரா.சம்பந்தன்

Share This

 


தமிழர் தலைநகரான திருகோணமலையில் கண்ட கண்ட இடங்களில் பௌத்த விகாரைகளை நிறுவவும் - மேலும் சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்களை அமைக்கவும் பேரினவாதம் முயற்சிக்கின்றது. அவர்களின் இந்தச் சண்டித்தனத்துக்கு நாம் ஒருபோதும் இடமளியோம்."

- இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 

"வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம். எமது தாயகத்தின் தலைநகர் திருகோணமலை. இங்கு தமிழர்களை ஒதுக்க அல்லது இல்லாதொழிக்கச் சிங்கள - பௌத்த அடிப்படைவாதிகள் பெரிய நிகழ்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.

தமிழர்கள் பெருமளவில் வாழும் இடங்களில் பௌத்த விகாரைகள் எதற்கு? சட்டவிரோதச் சிங்களக் குடியேற்றங்கள் எதற்கு? இந்த அடாவடிச் செயற்பாடுகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்." - என்றார்.

No comments:

Post a Comment

Pages