புல்மோட்டையில் வறிய மாணவர்களுக்கு ஒன்றரை  மில்லியன் செலவில் மிதிவண்டிகள் வழங்கி வைப்பு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

புல்மோட்டையில் வறிய மாணவர்களுக்கு ஒன்றரை  மில்லியன் செலவில் மிதிவண்டிகள் வழங்கி வைப்பு

Share This


திருகோணமலை- புல்மோட்டையில் வறிய  மாணவர்களுக்கு ஒன்றரை  மில்லியன் ரூபாய் செலவில் மிதிவண்டிகள் இன்று (13) வழங்கி வைக்கப்பட்டது.


சர்வதேச மனித நேய அமைப்பான முஸ்லிம் எய்ட் 
நிறுவனத்தினால் முன் மாதிரிக் கிராம அபிவிருத்தி திட்டத்தின்  கீழ் பாடசாலைக் கல்வியை  மேம்படுத்தும் நோக்குடன் புல்மோட்டை சதாம் முஸ்லிம் வித்தியாலயம்,  ஜின்னாபுரம் கலவன் பாடசாலை மற்றும் புல்மோட்டை மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயிலும் 25 மாணவர்களுக்கு  சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.


புல்மோட்டை சதாம் வித்தியாலத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் குச்சவெளி  உதவி பிரதேச செயலாளர் 
திருமதி பீ. மோஹனமுரளி,புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம்.டபிள்யூ விஜயகோன், பாடசாலை அதிபர்கள், முஸ்லீம் எயிட் செயற்திட்ட முகாமையாளர்  பஸ்லான் தாசிம், முஸ்லிம் எயிட் நிறுவன ஊழியர்கள், மாணர்வர்கள் மற்றும் பெற்றோர் கலந்து சிறப்பித்தனர்.

தூர பிரதேசங்களில் இருந்து வருகின்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக  வழங்கி வைக்கப்பட்டது.









      (அப்துல்சலாம் யாசீம்)

No comments:

Post a Comment

Pages