குவியல் குவியலாக வீழ்ந்து கிடந்த இலங்கை வங்கியின் பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்த நபர்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

குவியல் குவியலாக வீழ்ந்து கிடந்த இலங்கை வங்கியின் பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்த நபர்!

Share This



மாத்தறை இலங்கை வங்கியின் வாகன தரிப்பிடத்துக்கு அருகில் வியாழக்கிழமை (02) மாலை வீழ்ந்து கிடந்த 50 இலட்சம் ரூபா பணத்தை மாத்தறை நகரிலுள்ள கூரியர் சேவை நிறுவனம் ஒன்றின் உதவி முகாமையாளரான சந்தன உதயங்க (38) என்பவர் கண்டெடுத்து அதனை வங்கியிடம் ஒப்படைத்தது.


வங்கி ஊழியர்கள் ஏரிஎம்களுக்கு எடுத்துச் சென்ற அல்லது மத்திய வங்கியில் வைப்பிலிட எடுத்துச் சென்ற 50 இலட்சம் ரூபா பணமே வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


குவியல் குவியலாக தரையில் வீழ்ந்து காணப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான நோட்டுகளைப் போட்டோ எடுத்து, பின்னர் இது தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிக்கு தெரிவித்து வங்கி அதிகாரியை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.


No comments:

Post a Comment

Pages