கிண்ணியா -யானை தாக்கியதில் வயோதிபொருவர் மரணம் - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கிண்ணியா -யானை தாக்கியதில் வயோதிபொருவர் மரணம்

Share This


திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா- வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செம்பி மொட்டை காட்டுப்பகுதியில் யானை தாக்கி வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


செம்பி மொட்டை அரசுக்கு சொந்தமான காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது இன்று (21) யானை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு யானையின் தாக்குதலினால்  உயிரிழந்தவர் ஆயிலியடி பகுதியைச் சேர்ந்த எம்.எஸ். முகமட் யாகூப் (68வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தடை செய்யப்பட்ட காட்டுப் பகுதிக்குள் சென்று மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது யானை தாக்கி விழுந்து  கிடந்த நிலையில் விழுந்து கிடந்த இடத்துக்கு அருகில் உள்ள வயல் உரிமையாளரான அவரது மகன் விழுந்து கிடந்த தந்தையை தூக்கிக் கொண்டுவந்து யானை மின் வேலிக்கு அருகில் கொண்டு வரும்போது உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்
வான்எல பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Pages