திருகோணமலை- மூதூர் பாரதிபுரம் மகா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்பிற்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 28 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.
புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி (22) பாடசாலை மண்டபத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்ற போதே புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்தில் பாரிய கல்வி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வரும் சண்முகம் குகதாசனின் வழிகாட்டலின் கீழ் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் மாணவர்களை இன்னும் வலுவூட்டும் சக்தியாக அமைந்துள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவர் சண்முகம் குகதாசன், செயலாளர் கே. சிவானந்தன், ஓய்வு நிலை கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு வெற்றிவேலு, மூதூர் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள், பெற்றோர், ஆசிரியர் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் திருகோணமலை மாவட்ட நலன்புரி சங்கத்தினால் இவ்வாறான செயற்பாடுகள் சண்முகம் குகதாசன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருவதை தெரிந்து கொண்ட வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் கிராமப்புற மக்கள் தங்களது பிள்ளைகளையும் இவ்வாறான செயற்திட்டங்களுக்குள் இணைத்துக் கொண்டு இன்னும் கல்வி அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment