தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மே தின ஊர்வலம் திருகோணமலையில் இன்று (01) இடம் பெற்றது.
உழைப்பே உயர்வு என்ற தொனிப்பொருளில் இவ்வருடம் மே தினம் கொண்டாடப்பட்டது.
திருகோணமலை உவர்மலை வளி விடு பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாட்டைத் தொடர்ந்து நடைப்பயணியாக பதாதைகளை ஏந்திய வண்ணம் இலிங்கநகர் வரை பயணித்தனர்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் குமாரசாமி நளினகாந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.
இந்த நடைபவணியின் போது உழைப்பால் உயர்வோம். பொதுத்தேர்தல் வேண்டும். சமாதானம் வேண்டும். பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். சம கூலி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் போன்ற கோஷங்களை எழுப்பியவாறு நடைபவணியாக சென்றனர்.
இந்நிகழ்வில் குச்சவெளி திருகோணமலை மூதூர் கன்னியா மற்றும் கப்பல் துறை போன்ற பகுதிகளைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment