ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

Share This

 


கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கு 2024ஆம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்டமாக 52 ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இன்று (26) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.  ரத்நாயக்க, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.கே.குணநாதன், கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திரு.ஜே.எஸ்.அருள்ராஜ், கிழக்கு மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் திரு.ஜே.லியாகத்தலி, கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் திருமதி.எஸ்.ஆர்.ஹசந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இங்கு உரையாற்றிய ஆளுநர், 2024ஆம் ஆண்டு கிழக்கு மாகாண அரச ஆசிரியர் சேவைக்கான முதற்கட்ட ஆட்சேர்ப்பில் நியமனங்களை ஏற்காத மற்றும் சேவைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு பதிலாக இங்குள்ள 52 பேர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கடமைகளை சரியான முறையில், எதிர்கால சந்ததியினருக்கு திறம்பட பயன்படுத்தவும், திருப்திகரமான முறையில் சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாழ்த்துகள் தெரிவித்தார்.


முதற்கட்ட ஆட்சேர்ப்பில் சேவைக்கு சமூகமளிக்காத, நியமனங்களை ஏற்காதவர்களுக்கு பதிலாக மொழி மூல அடிப்படையில்  இந்த 52 பேரும் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.






No comments:

Post a Comment

Pages