திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் இடமாற்றம் பெற்று ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில் ஓய்வூதிய திணைக்களத்தின் புதிய ஓய்வூதியப் பணிப்பாளராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர அதிகாரி சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் நேற்று (01) ஓய்வூதிய திணைக்களத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ஜெகத் டி. டயஸ் கடந்த (31) ஆம் திகதி ஓய்வு பெற்றமையை தொடர்ந்து சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்கள் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment