கிண்ணியாவில் BBQ இதுவரை 26 பேர் வைத்தியசாலையில்!! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

கிண்ணியாவில் BBQ இதுவரை 26 பேர் வைத்தியசாலையில்!!

Share This

 


இரண்டாம் இணைப்பு -


இதுவரை சுட்ட கோழி சாப்பிட்டு 26 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அத்துடன் குறித்த உணவகத்தில் சுட்ட கோழியை உட்கொண்ட பலர் அனுமதிக்கப்படலாம் எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியாக அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் உயர் அதிகாரியொருவர் எமது TrincoMedia ஊடக வலையமைப்பிற்கு  தெரிவித்தார்.


தொடர்ச்சியாக செய்திகளை உங்களுக்காக வழங்க காத்திருக்கின்றோம்.

நீங்களும் என்னுடன் இணைந்து இருங்கள்.


மேலதிக செய்திகளுக்காக WWW.TRINCOMEDIA.LK  என்ற இணையதளத்தை பார்வையிடவும்.


கிண்ணியாவில் BBQ சுட்ட கோழி சாப்பிட்ட 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!


கிண்ணியாவிலுள்ள ஒரு உணவகத்தில் சுட்ட கோழி சாப்பிட்ட 19 பேர், இன்று (22) உடல் நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாந்தி, வயிற்று வலி  எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.


திருகோணமலை உணவு மற்றும் மருந்து திணைக்கள அதிகாரிகள் உணவகத்திற்கு ஆய்வு மேற்கொண்டு, அங்கு தயாரிக்கப்பட்ட BBQ சுட்ட கோழி, பரோட்டா மற்றும் மயோனிஸ் மாதிரிகளை சேகரித்து, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (MRI) க்கு அனுப்புவதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


சுகாதாரத் துறையின் ஆரம்ப விசாரணைகளின் படி, மயோனிஸ் உரிய முறையில் தயாரிக்கப்படாமையும், உணவில் மாசு ஏற்பட்டிருப்பதும் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.


பாதிக்கப்பட்டவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.


உணவு பொருட்கள் மற்றும் உணவகங்களில் சுகாதார விதிகளை பின்பற்றுவது அவசியம் எனவும் குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உணவுத் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும்  விடயத்துக்கு பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages