திருகோணமலை - கந்தளாய் நகரில் Covid 19 தொற்றுக்கு உள்ளானவர் இனங்காணப்பட்டுள்ளமையால் உடனடியாக வியாபார நிலையங்களை மூடுமாறு வர்தக சங்கம் விடுத்த அறிவித்தலில் வியாபார நிலையங்கள் இன்று தொடக்கம் மறுஅறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
வெலிசற கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கந்தளாய் - ரஜ எல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபருக்கே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
(எம்.ஜே. அன்வர் அலி)
No comments:
Post a Comment