திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நிரந்தர ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்! - TrincoMedia.lk

Post Top Ad

Responsive Ads Here

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை நிரந்தர ஊழியர்களுக்கு உலர் உணவு பொதிகள்!

Share This














(அப்துல்சலாம் யாசீம்) 






திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் பணி புரியும் நிரந்தர   ஊழியர்களின் சேவையை பாராட்டி “Voluntary Organisation for Vulnerable Community Development (VOVCOD) நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ அமைப்பு”  என்ற அரச சார்பற்ற நிறுவனத்தினால்  53 ஊழியர்களுக்கு இன்று (21) உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. 







ஏற்கனவே தற்காலிக ஊழியர்களின் சேவையை பாராட்டி 18-03-2020  அன்று 65 ஊழியர்களுக்கு  உலர் உணவுப் பொதிகள் வழங்கப் பட்டிருந்தது


திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் தவிசாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் தலைமையில் இடம்பெற்றது. 





இவ் வைபவத்தில் பொது சுகாதார அதிகாரி திரு தவராசா பிரதேச சபையின் செயலாரரும், VOVCOD சார்பில் திரு தர்மலிங்கம் கணேஷ் விபுலானந்த கல்லூரி அதிபர் திரு ஜெரோம் மற்றும் திரு  ச. நடேசலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 























































No comments:

Post a Comment

Pages