(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை- மட்கோ பிரதேசத்தில் குரங்கு கடித்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவம் இன்று (22) காலை 7. 15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
படுகாயமடைந்த சிறுவன் திருகோணமலை-மட்கோ, முகம்மதிய்யா நகர் பகுதியைச் சேர்ந்த கீர்த்தி சிங்க தனூஷன் (10வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது- வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு காலை சாப்பாட்டை வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்த வேளையில் பின்னால் சென்ற குரங்கு காலை பிடித்த போது சிறுவன் கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து சிறுவனை குரங்கு கடித்து காயப்படுத்தியதுடன் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய காலினை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
திருகோணமலை நகர்ப்பகுதியில் குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதாக அதிகாரிகளிடம் தெரியப்படுத்தும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment