மத்திய கிழக்கு நாடுகளில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் இன்னல்களுக்கு முகங்கொடுத்துவரும் இலங்கையர்களை, நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இதற்காக அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
இந்நிலையில் முதலாவது கட்ட நடவடிக்கையாக குவைட், மாலைதீவு மற்றும் டுபாய் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment