(ஏ. ஆர். எம். றிபாஸ்-கிண்ணியா)
பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பாக மாகாண மட்ட தயார்படுத்தல்கள் சம்பந்தமான கலந்துரையாடல் இன்று (06) கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இடம்பெற்றது.
தேசிய மட்டத்தில் மீண்டும் பாடாசாலைகளை ஆரம்பிப்பது சம்பந்தமாக தயாரிக்கப்படும் திட்டக்கோவையில் மாகாண மட்டங்களில் இருக்கின்ற பாடசாலைகளின் நிலை குறித்து தரவுகள் சேகரிக்கும் அடிப்படையில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர கலந்து கொண்டார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்.
சமூக ஊடகங்களில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும் அவை அனைத்தும் போலியான கருத்துக்கள் என அவர் தெரிவித்தார்
நாட்டின் சுகாதார நிலைமைகள் குறித்து நன்கு ஆராய்ந்தபின்னரே பாடசாலைகளை மீள ஆரம்பத்தில் தொடர்பாக உறுதிப்படுத்த முடியும் என்பதால் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்னமும் தீர்க்கமாக முடிவுகள் எட்டப்படவில்லையென அவர் தெரிவித்தார்.
உயர்தர பரீட்சைகள் நடத்துவது தொடர்பிலும் இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை அதேவேளை எந்தவொரு மாணவனுக்கும் பாதிப்புகள் ஏற்படாதவாறு உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் ஆராயப்படும் என அவர் தெரிவித்தார்.
சில பாடசாலைகளில் சமூகவலைத்தளங்ளின் கற்பித்தல் செயன்முறைகள் முன்னெடுக்கப்படுகிறது அவை அனைத்தும் பாடசாலையின் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சி அல்ல அவை அனைத்தும் மேலதிக செயற்பாடுகள்
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விடுமுறையானது விஸ்தரிக்கப்பட்டுள்ளது அதனால் எவரும் பீதி அடையவேண்டாம் பாடசாலை பாடத்திட்டங்கள் அனைத்தும் பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment