கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் அ.தி.மு.க. அரசு மீது நடிகர் ரஜினிகாந்த் கடும் கண்டனம்
கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: கொரோனா நெருக்கடி நேரத்தில் டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என ரஜினிகாந்த அதிரடியாக தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எடுத்து உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில் ரஜினியின் கருத்து அதிரடியாகவே பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரஜினிகாந்த்
நேற்று டிவிட்டர் பக்க பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில், கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடியும் திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள் என கூறியுள்ளார்.
(திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது)
No comments:
Post a Comment